தங்கம் கொடுத்த கதாநாயகன்

அதிக சம்பளம் கேட்காதவர், தயாரிப்பாளர்களின் சிரமங்களை அறிந்தவர், உயிரைக் கொடுத்து நடிப்பவர் என விஜய் சேதுபதியைப் பலவிதமாகப் பாராட்டுகின்றனர் திரையுலகத்தினர். இந்நிலையில் இன்னொரு நல்ல காரியமும் செய்து பெயர் வாங்கியுள்ளார் அவர். வேறொன்றும் இல்லை, திரைத்துறைத் தொழி லாளர்கள் நூறு பேருக்குத் தலா ஒரு பவுனில் ஆன தங்கப் பதக்கத்தை அளித்துள்ளார். இதற்கான நிகழ்ச்சியில் பேசிய அவர், இது திரைத்துறைக்குத் தாம் செலுத்தும் நன்றிக்கடன் என்றார்.

திரைக்குப் பின்னால் உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கிற கலைஞர்களைக் கௌரவிக்கும் பொருட்டு, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் 'உலகா யுதா' என்ற அமைப்பு சார்பாக தமிழ் சினிமாவில் 100 மூத்த திரைப்படத் தொழிலாளர்களுக்குத் தங்கப் பதக்கங்களை வழங்க முடிவு செய்திருந்தனர். ஒரு பதக்கம் ஒரு பவுன் வீதம் 100 சவரன் தங்கத்திற்கான செலவை நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டார். நேற்று முன்தினம் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

"நான் நூறு பவுன் கொடுத்தேன் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஏன் கொடுத்தேன் தெரியுமா? இங்கே இருந்துதான் நான் எடுத்தேன்... அதனாலதான் கொடுத்தேன். "இன்றைக்கு எனக்கு கிடைக்கிற மரியாதை எல்லாம் நடிகர் விஜய் சேதுபதிக்கு கிடைக்கிற மரியாதைதான். என்னை ஒரு நடிகனாக அங்கீ கரித்திருக்கிற இந்த சினிமாவுக்கு நான் செய்கிற நன்றிக்கடனாக மட்டுமே இதைப் பார்க்கிறேன்," என்று நெகிழ்ச்சியில் பேசினார் விஜய் சேதுபதி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!