புதிய வாய்ப்புகள்: அமலா மகிழ்ச்சி

விவாகரத்து பெற்ற பின்னர் புதிய வாய்ப்புகளைப் பெறுவதில் தீவிர கவனம் செலுத்தி வந்தார் அமலா பால். அதன் பலனாக தற்போது தமிழில் 'வேலையில்லா பட்டதாரி 2', 'திருட்டு பயலே 2' உள்ளிட்ட 5 படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் படங்கள் வெளியான பின் தனது சந்தை மதிப்பு நிச்சயம் உயரம் செல்லும் என்பது அமலாவின் நம்பிக்கையாக உள்ளது. "தமிழில் 'மின்மினி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', பெயரிடப்படாத ஒரு புதிய படம் ஆகியவற்றில் நடித்து வருகிறேன். மலையாளத்தில் 'குயின்' படத்தின் மறுபதிப்பிலும் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளேன்.

"இவற்றைத் தொடர்ந்து 'அச்சாயன்ஸ்', பெயரிடப்படாத திகில் படம் ஆகியவற்றிலும் என்னைப் பார்க்க முடியும்," என்கிறார் அமலா பால். இதற்கிடையே தெலுங்கு பட உலகில் இருந்தும் அமலாவுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம். "அதிகப் படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக தரமற்ற கதைகளைத் தேர்வு செய்ய மாட்டேன். ரசிகர்களிடம் எனக்குள்ள பெயரைத் தக்கவைப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவேன்," என்கிறார் அமலா பால்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!