கலையரசனின் ‘எய்தவன்’ மே 12ல் வெளியீடு

கல்வித்துறையில் நிலவும் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது ‘எய்தவன்’. கலையரசன், சாதனா டைட்டஸ் ஜோடி சேர்ந்துள்ளனர். இப்படம் இம்மாதம் 5ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்நிலையில் ‘பாகுபலி 2’க்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பை அடுத்து அப்படம் மேலும் பல திரையரங்குகளை ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து ‘எய்தவன்’ படத்தின் வெளியீடு மே 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனப் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.