நிக்கி கல்ராணி அளித்த கட்டட நிதி

நடிகர் சங்கத்துக்குப் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அச்சங்கத்துக்குப் புதிய கட்டடம் கட்டும் பணி வேகம் எடுத்துள்ளது. பழைய, முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் தங்களால் இயன்ற தொகையை நன்கொடையாக அளித்து வருகின்றனர். நடிகர்கள் விஷால், கார்த்தி இருவரும் தலா 5 கோடி ரூபாய் அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். கட்டட நிதிக்காக இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இளம் நாயகி நிக்கி கல்ராணியும் கட்டட நிதியாக 3 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். அண்மையில் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமனை சந்தித்து அவர் காசோலை வழங்கி உள்ளார். இதையடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் நிக்கி கல்ராணிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர். நிக்கி கல்ராணி தற்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.