தேடி வரும் புதிய வாய்ப்புகள்

தன்‌ஷிகா காட்டில் தற்போது அடை மழை. ‘கபாலி’யில் நடித்த பிறகு ஏராளமான வாய்ப்புகள் தேடி வருகிறதாம். ‘காலக்கூத்து’ படத்தில் ‘மெட்ராஸ்’ கலையரசன் ஜோடியாக கல்லூரி மாணவியாக நடிக்கிறார். ‘விழித்திரு’ படத்தில் சென்னை தமிழ் பேசும் ஏழைப் பெண் வேடம். “மீரா கதிரவன் இயக்கும் இந்தப் படத்தில் எனது நடிப்பைப் பார்த்து வசந்தபாலன், சீனுராமசாமி போன்ற இயக்குநர்கள் பாராட்டினார்கள். இது தவிர ‘உரு’ என்ற திகில் படத்திலும் நடித்து வருகிறேன்,” என்கிறார் தன்‌ஷிகா. தமிழ், மலையாளத்தில் உருவா கும் ‘சோலோ’ என்ற படத்தில் தன்‌ஷிகா கண்பார்வையற்ற நடனக் கலைஞராக நடிக்கிறார். இதைய டுத்து கல்யாண் இயக்கும் ‘கூத்தாடி’ படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளாராம். தவிர, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார் தன்‌ஷிகா.