‘என் மூச்சும் பேச்சும் நடனம்தான் - சோனாக்‌ஷி

‘நூர்’ படத்திற்குக் கிடைத்த பாராட்டுகளால் உற்சாகத்தில் இருக்கிறார் சோனாக்‌ஷி சின்கா. சத்ருகன் சின்காவின் மகள் என்ற முத்திரை விழாமல் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்துவதில் கவனமாக இருக்கிறார் சோனாக்‌ஷி. “நூர்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு குறித்து அவர் கூறுகையில், “நண்பர்கள், உறவினர்கள், சக நட்சத்திரங்களிடமிருந்து தொடர்ந்து பாராட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன. படம் வெளியான சில நாட்களில் கலவையான விமர்சனம் வருமோ என்ற பயம் இருந்தது. இப்போது அந்தப் பயம் நீங்கிவிட்டது. ‘நூர்’ கதாபாத்திரம் உங்களுக்குப் பிடித்திருந்ததா? “பிடித்திருந்ததால்தான் நடித்தேன். இது பாகிஸ்தானைச் சேர்ந்த எழுத்தாளரின் நாவலை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்ட படம். ஒரு பெண் பத்திரிகையாளர்தான் படத்தின் மையப் புள்ளி. இயக்குநர் அனில் சிப்பி கதை கூறியதுமே உற்சாகமாகி உடனடியாக நடிக்க சம்மதித்தேன்.