அஞ்சலியைத் துரத்தும் பூனை பேய்கள்

பேய் படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த அஞ்சலிக்கு தன் வீட்டில் பேய் இருப்பதைப்போல உணர்ந்ததால் வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்து இருக்கிறார். தமிழ்ப் படங்களில் மும்முரமாக நடித்துக் கொண்டிருந்த அஞ்சலிக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக செ ன் னை யி லி ரு ந் து ஹைதராபாத்திற்கு குடி பெயர்ந்தார். தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்ததால் அ ங் கே யே தங்கிவிட்டார். அங்கு பேய் சம்பந்தப்பட்ட பல தெ லு ங் கு ப் படங்களில் நடித்து வந்த அஞ்சலிக்கு அதுவே ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி விட்டதாம். அவர் தங்கியிருந்த வீட்டில் அடிக்கடி ஏதோ சத்தம் தொடர்ந்து கேட்டதாகவும் பூனைகள் அந்த வீட்டில் அதிகமாக சுற்றிக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

பூனைகளின் உடலில் பேய்கள் இருப்பதாக நினைத்து பயந்துபோன அஞ்சலி அந்தப் பயத்திலிருந்து தப்பிக்க அவர் இருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு வீட்டிற்கு குடிபோய் விட்டார். அஞ்சலியும், ஜெய்யும் காதலித்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில் அஞ்சலி விரைவில் சென்னைக்கே வந்து விடுவார் என்றும் சொல்கிறார்கள். இருவரும் இணைந்து நடித்துள்ள ‘பலூன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. மே மாதம் அது திரைக்கு வர இருப்பதாக அண்மையில் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.