ஊடகங்களை எச்சரிக்கும் பார்வதி மேனன்

கேரளா ஊடகங்கள், பார்வதி மேனன் அதிக சம்பளம் கேட்கிறார் என்று செய்திகள் வெளியிட்டன. இதற்கு தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் ஊடகங்களைக் கடுமை யாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பார்வதி. "ஊடகங்கள் அறத்தைக் கடை பிடிக்கவேண்டும். எனக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது என்பது பற்றி தொலைக் காட்சியிலோ இணையத்திலோ நான் பகிர்ந்து கொண்டதாக என் நினைவில் இல்லை. அப்படியிருக்கும்போது சில இணையத்தளங்கள், தொலைக்காட்சிகள் நான் எவ்வளவு சம்பளம் வாங்குகிறேன், நான் எதற்காக என் சம்பளத்தை 'உயர்த்துகிறேன்' என்று அவர்கள் இஷ்டத்திற்கு செய்திகளை வெளியிடுகின்றனர்.

உங்களிடம் செய்திகள் இல்லையா? 'நம்பத்தகுந்த வட்டாரங்கள்' என்று கூறி இப்படி செய்திகளை இட்டுக் கட்டாதீர்கள்? "நான் எவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என்பது எனக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள விவகாரம். மற்றவர்களுக்கு இதில் கூடுதல் அக்கறை ஏற்பட என்ன இருக்கிறது? அப்படியே சம்பள வித்தியாசம் இருந்தாலும் அதனைப் பற்றி நான் பேசினாலும் எனக்காக பேச யார் உங்களுக்கு உரிமை அளித்தது? "நான் கூறுவது என்ன வென்றால் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாதீர்கள். தவறான செய்திக் கட்டுரைகளை முதலில் நீக்கி விட்டு உங்கள் தரங்களை உயர்த்திக் கொள் ளுங்கள். எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை இன்னும் போய் விடவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!