‘பவர் பாண்டி’ இயக்கத்தினால் தனு‌ஷிற்கு குவியும் பாராட்டுகள்

"பவர் பாண்டி படத்­தின் வெற்றியை நான் எதிர்­பார்த்­தேன். ஆனால் இவ்­வ­ளவு ஊக்­க­க­ர­மான விமர்­ச­னங்களை நிச்­ச­ய­மாக நான் எதிர்­பார்க்­க­வில்லை. குடும்பம், குடும்ப­மா­கச் சென்று படம் பார்த்­து­விட்டு வரு­கிறார்­கள். ஷங்கர் சார், கௌதம் மேனன், சமுத்­தி­ரக்­கனி அண்ணன் என்று பல­ரி­டம் இருந்­தும் பாராட்­டு­கள் வந்து குவி­கின்றன," என்று மகிழ்ச்­சி­யு­டன் கூறினார் இயக்­கு­நர் தனுஷ். தனுஷ் முதன்­மு­த­லாக இயக்கி இருக்­கும் படம் 'பவர் பாண்டி'. இந்தப் படத்­தில் ராஜ்கிரண் கதா­நா­ய­கனாக நடித்­தி­ருக்­கிறார். இளம் வயது ராஜ் கிரணாக தனுஷ் நடித்­தி­ருக்­கிறார்.

60 வய­து­களில் இருக்­கும் பெரி­ய­வர்­களின் வாழ்க்கையை அப்­பட்­ட­மாக இந்த இளைய தலைமுறை­யி­ன­ருக்கு எடுத்­துக்காட்டும் வகையில் படத்தை எடுத்­தி­ருந்தார். படத்­தில் ராஜ் கிரண் தன் பேரப்பிள்ளை­களு­டன் விளை­யா­டு­வ­தும் மகன், மரு­ம­களு­டன் உரை­யா­டு­வது அனைத்­தும் நம்­முடைய வாழ்க்கை­யில் நடப்­பது போல இருப்­ப­தால் அனைத்து வய­தி­னரை­யும் கவர்ந்­தி­ருக்­கிறது இந்தப் படம். இயக்­கு­ந­ராக அறி­மு­கம் ஆன முதல் படத்­தி­லேயே 60 வய­திற்கு மேற்­பட்­ட­வ­ரின் காதலைச் சொல்ல வேண்டும் என்று எப்­ப­டித் தோன்­றி­யது என்று கேட்­ட­தற்கு, "சில நேரம் நான் என்னையே 60 வயசு ஆளாக கற்பனை செய்து பார்ப்­பேன். 60 வய­தானால் நான் என்­ன­வெல்­லாம் செய்வேன் என்று யோசிப்­பேன். பெரும்பா­லான எழுத்­தா­ளர்­கள், தங்களை அந்த இடத்­தில் வைத்­து­தான் அனு­ப­வித்து கதை எழு­து­வார்­கள். அப்­ப­டித்­தான் நானும் இந்தக் கதையை உரு­வாக்­கி­னேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!