ரசிகரிடம் சீறிய மஞ்சிமா

அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் சில வம்படிப் பேர்வழிகள் பகிரும் கருத்துகளுக்கு குஷ்பு, ராதிகா, கஸ்தூரி உள்ளிட்ட நடிகைகள் அதிரடியாகப் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் மஞ்சிமாவும் தற்போது இணைந்துள்ளார். தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடி யாக 'இப்படை வெல்லும்' படத்தில் நடித்து வருகிறார் மஞ்சிமா. இந்நிலையில் சமூக வலைத்தளத் தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவு குறித்து கருத்து தெரிவித்த ரசிகர் ஒருவர், கதாநாயகிகள் உடுத்தும் உடைகள் குறித்து தரக்குறைவாக விமர்சித்தாராம்.

இதனால் ஆவேசமடைந்த மஞ்சிமா, கதாநாயகிகளை நிர்வாணமாகப் பார்க் கவே ரசிகர்கள் திரையரங்குக்கு வரு வதாக யாரேனும் நினைத்தால் அது தவறு என்று குறிப்பிட்டுள்ளார். இத்த கைய எண்ணத்தை அவர்கள் மாற்றிக் கொள்ளட்டும் என்றும் சீறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!