படப்பிடிப்பைப் புறக்கணித்த சம்யுக்தா

பிரபல கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே, கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக கன்னடப் படப்பிடிப்பை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டார் என புகார் எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பே அக்குறிப்பிட்ட கன்னடப்படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டாராம். இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டு அதற்குரிய சம்பளமும் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் தமிழ் இயக்குநர் சுப்புராஜ், 'இறைவி'க்கு அடுத்தபடியாக புதிய படத்தை இயக்குகிறார். இதில் பிரபுதேவா நடிக்க இருப்பதையும் தெரிவித்தாராம். பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை. தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கன்னடப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்காமலேயே அப்படத்தின் படப்பிடிப்பைப் புறக்கணித்துள்ளார் சம்யுக்தா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!