சக நடிகர்களின் ‘டார்லிங்’ ரகுல்

தெலுங்குத் திரையுலகில் ‘பாகுபலி’ நாயகன் பிரபாசுக்கு ‘டார்லிங்’ என்ற செல்லப் பெயர் உண்டு. அதேபோல் ரகுல் ப்ரீத்சிங்கையும் டார்லிங் என்று தான் சக நடிகர்கள் செல்லப் பெயர் வைத்து அழைக்கின்றனர். தமிழில் கவுதம் கார்த்திக் ஜோடியாக ஒரு படத்தில் ரகுல் நடித்த போது, தமிழ் ரசிகர்கள் அவரை கண்டுகொள்ள வில்லை. ஆனால் இவர் இப்போது தெலுங்கில் ரொம்ப பரபரப்பாக இயங்கி வருகிறார். இதையடுத்து கோலிவுட்டில் இருந்து வந்த தொடர் நச்சரிப்பை அடுத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ரகுல். மேலும், முருகதாஸ் இயக்கத்தில், மகேஸ் பாபு நடிப்பில் தெலுங்கு, தமிழில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ‘ஸ்பைடர்’ படத்திலும் இவர்தான் நாயகி.