‘குடிசையில் வசித்தாலும் ராணியாக வாழ்வதே நல்லது’

'புலி' படத்தில் நடிக்க அழைக்கும்போது எனக்கு அதிக காட்சிகள் இருப்பதாகக் கூறினர். ஆனால், படத்தில் அப்படி எதுவும் அதிகமான காட்சிகள் இடம்பெறவில்லை. அதற்குப்பின் தான் எனக்குப் புத்தியே வந்தது. ஒரு பெரிய மாளிகையில் வேலைக் காரியாக இருப்பதைவிட ஒரு குடிசையில் ராணியாக இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார் நடிகை நந்திதா ஸ்வேதா. 'அட்டக்கத்தி' படத்தில் துவங்கி 'எதிர் நீச்சல்',

'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'முண்டாசுபட்டி' போன்ற நல்ல படங்களில் நடித்தவர் நந்திதா. 'நெஞ்சம் மறப்பதில்லை', 'உள்குத்து', 'வணங்காமுடி' உட்பட நான்கு படங்களை இப்போது தன் கைவசம் வைத்துள்ளார் நந்திதா. "இன்னும் சில ஆண்டுகளுக்குள் நானும் 'பாகுபலி' படத்தில் சிறப்பாக நடித்த ரம்யா கிருஷ்ணன் மேடம் மாதிரி ஒரு நல்ல பாத்திரத்தில் நடிக்கவேண்டும். அப்படிப்பட்ட வேடத்தில் நடித்தால்தான் திரைப்படத் துறையை விட்டே போவேன். 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் சண்டைக் காட்சி களில் பின்னி பெடலெடுத்திருக்கிறேன். படம் பாருங்கள் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்," என்கிறார் நந்திதா. அவர் தமிழக ஊடகச் செய்தியாளர்களிடம் மேலும் விவரங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!