ஒரு மணிநேர இருளில் நடக்கும் கதை ‘கிரகணம்’

இளன் இயக்கத்தில் கிருஷ்ணா, சந்திரன், நந்தினி இணைந்து நடித்துள்ள படம் 'கிரகணம்'. கே.ஆர். பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் கிருஷ்ணா, சந்திரன், இணைந்து நடிக்கிறார்கள். நந்தினி என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் கருணாஸ், கருணாகரன், ஜெயபிரகாஷ், பாண்டி, சிங்கப்பூர் தீபன் ஆகியோரும் நடித்துள்ளனர். இது புதிய கோணத்தில் சொல்லப்படும் புதுவிதமான கதை என்கிறார் இயக்குநர் இளன்.

சந்திர கிரகணம் நிகழும் ஒரு நாள் இரவில் அந்த கதையின் கதாபாத்திரங்கள் வாழ்விலும் இருள் சூழ்கிறது. அந்த இருள் ஒரு மணி நேரம்தான். அதற்குள் அவர்களின் வாழ்வில் என்னென்ன திருப்பங்கள் ஏற்படுகின்றன என்பதை பரபரப்பாகவும் திகிலாகவும் சொல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். "ஒரு நாள், ஓர் இரவு என்றெல்லாம் கதைகளைச் சொல்லும் இன்றைய இயக்குநர்கள் மத்தியில் ஒரு மணி நேரத்தில் நடக்கும் சம்பவத்தை இந்தப் படத்தில் இயக்குநர் வித்தியாசமாகச் சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார்," என்று படக்குழுவினர் இளனை மெச்சுகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!