படிப்புக்கு இடையே நடிக்கும் மாளவிகா

'குக்கூ' படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் நாயகி மாளவிகா நாயர் பற்றி எந்தத் தகவலும் வெளியாகவில்லை. நல்ல நடிகை என்று பெயரெடுத்தவரை அடுத்த படத்தில் பார்க்க முடியவில்லை என்பதில் ரசிகர்களுக்கும் வருத்தம் இருக்கவே செய்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறாராம் மாளவிகா. இடையில் என்ன செய்து கொண்டிருந்தார் என்கிறீர்களா? "வேறென்ன... படிப்புதான். எங்கள் குடும்பத்தில் எல்லாரும் படித்து நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்கள். எனக்கும் படிப்பில் ஆர்வம் அதிகம். நான் ஏற்கெனவே நடித்த படங்கள் அனைத்தும் கோடை விடுமுறை நாளில் நடித்தவைதான். "'குக்கூ' படம் பத்தாம் வகுப்பு விடுமுறையின்போது நடித்தது. அடுத்து மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்ததால் நடிப்புக்கு இடைவெளி விட்டு படிக்கச் சென்றுவிட்டேன். தற்போது கோடை விடுமுறை என்பதால் மீண்டும் படத்தில் நடிக்கிறேன்," என்கிறார் மாளவிகா. இனி கல்லூரிப் படிப்பு முடியும் வரை விடுமுறை நாட்களில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கத் தீர்மானித்துள்ளாராம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!