சிம்பு தரப்போகும் இன்ப அதிர்ச்சி

'த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா' புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பது தெரிந்த சங்கதி. 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் குறித்து அவ்வப்போது வெளியாகும் தகவல்கள் எல்லாம் சிம்பு ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைக்கிறது. "இந்தப் படத்தில் துளிகூட ஆபாசமோ, இரட்டை அர்த்த வசனங்களோ இல்லை," என்று சூடம் கொளுத்தி சத்தியம் செய்யாத குறையாகக் கூறி வருகிறார் ஆதிக்.

ஒரு சிம்புவை ரசித்த அவரது ரசிகர்களுக்கு மூன்று சிம்புவை ஒரே திரையில் இவர் காட்டப் போகிறார் என்கிற தகவல் இனிப்பாகத்தான் இருக்கும். அந்த இனிப்பின் மீது இன்னும் கொஞ்சம் சர்க்கரையை கொட்டிக்கொள்ளலாம் சிம்புவின் அன்பான ரசிகர்கள். எதற்காக என்பது தானே உங்கள் கேள்வி?

"விஷயம் இருக்கிறது. 'அன்பானவன் அசரா தவன் அடங்காதவன்' படத்தில் சிம்புவுக்கு மூன்று வேடங்கள் என்று மட்டுமே இதுவரை பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அதில் சிறிய மாற்றம். "இந்தப் படத்தில் மூன்று சிம்புகள் அல்ல. நான்கு சிம்புகள் இருக்கின்றனர். நால்வருக்கும் நான்குவிதமான தோற்றம். ஒரு சிம்புவைப் பற்றி கடைசிவரை சொல்லவே வேண்டாம் என்று தான் மறைத்தோம். ஆனால் படம் இரண்டு பகுதிகளாக வெளியாகப் போவதால் அந்தப்புதிரையும் இப்போது அவிழ்த்துவிட்டோம். இது ரசிகர்களுக்கு சிம்பு அளிக்கப்போகும் இன்ப அதிர்ச்சி," என்கிறார் ஆதிக். இந்த நிலையில், இந்தப் படத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் கௌரவ வேடத்தில் தோன்று கிறாராம்.

அவரது பகுதிக்கான படப்பிடிப்பு 12ஆம் தேதி தொடங்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் வரும் காட்சிகள் புதுமையாக இருக் கும் என படக்குழுவினர் தெரி வித்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!