ஏமாற்றத்தில் மூழ்கிய வாரிசுகள்

இப்படியொரு செய்தி ஊடகங்களில் வெளியாவதை ரஜினியும் தனு‌ஷும் விரும்புகிறார்களோ இல்லையோ, ரஜினி மகள் ஐஸ்வர்யா மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்கிறார்கள் கோடம்பாக்க விவரப்புள்ளிகள். ரஜினியின் இரு மகள்களுமே இப்போது சினிமா இயக்குநர்களாகி விட்டனர். இருவரது இயக்கத்திலுமே படங்கள் வெளிவருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், மனைவியைத் தொடர்ந்து தனு‌ஷும் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அவரது முதல் படமான 'பவர் பாண்டி' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மருமகனின் திறமையை மாமனார் ரஜினியும் மெச்சிக்கொண்டார். சரி., தற்போதைய விஷயம் என்ன...? 'பவர் பாண்டி' படத்தின் கதையே ஐஸ்வர்யாவுடையது தானாம். தன் தந்தையை நடிக்க வைத்து தானே இயக்க வேண்டும் என்று ஆசை ஆசையாக அவர் உருவாக்கிய கதை, எப்படியோ தனுஷ் கைக்கு மாறிவிட்டதாக தமிழக சினிமா இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரஜினிக்காக உருவாக்கப்பட்ட அந்தக் கதையில்தான் சில மாற்றங்கள் செய்து ராஜ்கிரணை நடிக்க வைத்தாராம் தனுஷ். இந்தக் கதையை தனு‌ஷுக்கு கொடுப்பதை முதலில் விரும்பவே இல்லையாம் ஐஸ்வர்யா. காலத்தின் கட்டாயம். கைமீறியோ, அல்லது கை நழுவியோ போய்விட்டது அது. அந்தப் படத்திற்காக வெளியே கிடைத்த பாராட்டும் வரவேற்பும் ஒரு படைப்பாளியாக ஐஸ்வர்யாவை ஏங்க வைத்திருப்பதாகவும் கிசுகிசுக்கிறது ஐஸ்வர்யாவின் பெயர் சொல்ல விரும்பா வட்டாரம்! இப்படியெல்லாம் அந்த இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ள செய்தி, தனுஷ் ரசிகர்களை அதிரவும் ஆத்திரப்படவும் வைத்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!