‘இருமுகன்’ அளித்த இரட்டிப்பு மகிழ்ச்சியில் விக்ரம்

ஏற்கெனவே இருமுகன் படத்தின் வசூல் வெற்றியால் உற்சாகத்தில் இருந்த விக்ரமுக்கு, அப்படம் இந்தியிலும் வெற்றிநடை போட்டு வரும் தகவல் கூடுதல் தெம்பளித்துள்ளது. இப்படத்தை ’இன்டர்நேஷனல் ரவுடி 2017’ என்ற தலைப்பில் இந்தியில் வெளியிட்டனர். விநியோகஸ்தர்கள் எதிர்பார்த்ததை விட இதன் வசூல் அபாரமாக உள்ளதாம். வட இந்தியாவில் மட்டுமல்லாமல் நேபாளம், வங்காளதேசம் போன்ற தெற்காசிய நாடுகளிலும் ரசிகர்களின் ஆதரவோடு வசூலைக் குவித்து வருகிறது

இப்படம். இதையடுத்து விக்ரம் தற்போது நடித்து வரும் படங்கள் குறித்த எதிர்பார்ப்பு இந்தித் திரையுலகில் எதிபார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’, ‘ஸ்கெட்ச்’, ‘சாமி 2’ ஆகிய படங்களைப் பற்றிய எதிர்பார்ப்பு உலகளவில் ஏற்பட்டிருக்கிறது. இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். ‘ஸ்கெட்ச்’ படத்தை விஜய் சந்தர் இயக்கி வருகிறார். ‘சாமி 2’படத்தை இயக்குநர் ஹரி இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.