எதிரிகளான காஜல் அகர்வாலும் கேத்ரின் தெராசாவும்

தெலுங்கில் முன்னணி நடிகைகளான காஜல் அகர்வாலும் கேத்ரின் தெராசாவும் இணைந்து நடிக்கிறார்கள். இருவரும் இந்தப் படத்தில் போட்டி போட்டுக்கொண்டு எதிரிகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. தெலுங்கில் ராணா நடித்து வரும் படம் ‘நேனே ராஜூ நேனே அமைச்சர்’. இந்தப் படத்தில் ராணா இரண்டு கதாபாத்திரங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடிக்கிறார். ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் பிரபாசுடன் வில்லனாக மோதிய ராணா, இந்தப் படத்திலும் பாகுபலி படத்திற்கு இணையாக அதிரடி வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் இரண்டு ராணாவுக்குமிடையே சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன. மேலும், இப்படத்தில் காஜல் அகர்வால், கேத்ரின் தெரசா இருவரும் ராணாவுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். காஜல் அகர்வால், ராணாவின் ‘ராதா’ கதாபாத்திரத்தில் அதாவது அவரது மனைவியாகவும் கேத்ரின் தெரசா ராணி வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.