பிரியா ஆனந்த் சம்மதித்தால் மணப்பேன் - கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக் தன்னுடைய அண்மைய பேட்டியில் பிரியா ஆனந்த் என்னை மணக்க சம்மதித்தால் அவரையே காதலித்து மணப்பேன் என்று அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக் கிறார். ‘ரங்கூன்’ படத்தையடுத்து ‘இவன் தந்திரன்’ பட வெளியீட்டுக்காகக் காத்திருக் கிறார் கவுதம் கார்த்திக். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “நான் ஆங்கிலப் பள்ளியில் படித்ததால் அங்கு ஆங்கிலப் படம் மட்டும்தான் பார்க்க முடியும். அதனால் என் தாத்தா முத்துராமன், தந்தை கார்த்திக் நடித்த படங்களை நான் பார்த்ததில்லை. இப்போதுதான் அவர்களின் படங்களைப் பார்க் கிறேன்.

“ ‘கடல்’ படத்தில் நான் அறிமுகமானபோது பல காட்சிகளில் நன்றாக நடிக்கவில்லை. அது என் தந்தைக்கு வருத்தமாக இருந்தது. அதன் பிறகு ஒவ்வொரு காட்சியாக மணிரத்னம் சார் விளக்கமளித்து என்னை நடிக்க வைத்தார். “நான் சோர்ந்துபோயிருக்கும் நேரங்களில் எனக்கு ஊக்கம் தருபவர் என் தாய்தான். தந்தையைப் பொறுத்தவரை, ‘நீயே உன் உழைப்பில் முன்னேறி மேலே வா’ என்று கூறிவிட்டார். நடிக்க வந்த புதிதில் படப்பிடிப்பின்போது புகைப்படக் கருவியைக் கண்டாலே எனக்குப் பயம் வந்துவிடும். நடித்துவிட்டு வந்தால் போதும் என்று இருப்பேன். அதற்கு பின்னால் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பதை பிறகுதான் உணர ஆரம்பித்தேன். “நடிகை பிரியா ஆனந்த்துடன் காதலா? என்கிறார்கள். நான் ஆண், பெண் இருபாலரும் படிக்கும் பள்ளியில் படித்ததால் பெண்களிடம் எளிதாக நட்பு முறையில் பழகுவேன்.