சுடச் சுடச் செய்திகள்

எட்டு வேடங்களில் சேதுபதி

தன்னைப் பற்றிய நல்ல செய்திகளைக் கேள்விப்பட்டால் லேசாக புன்னகைத்து மற்ற விஷயங்களைத் தொடங்கிவிடுவார் விஜய் சேதுபதி. சர்ச்சைக்குரிய தகவல் களைக் கேட்டால் வாய்விட்டு சிரிப்பார். இப்போது நீங்கள் தெரிந்துகொள்ளப் போவது அவரைப் பற்றிய நல்ல விஷயம். புதிய படம் ஒன்றில் எட்டு வேடங்களில் நடிக்க உள்ளாராம் சேதுபதி. இப்படத்துக்கு ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்று தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தில் கவுதம் கார்த்திக்கும் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்து வருகி றார். ஆறுமுககுமார் என்பவர் இயக்கும் இப்படத்தில் நிகரிகா கொனிடேலா என்பவர் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் இரண்டாம் பாதியை முழுக்க முழுக்க வனப்பகுதியிலேயே படமாக்கு கிறார்களாம். கதைப்படி விஜய் சேதுபதிக்கு பழங்குடியினர் தலைவர் வேடம். வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்குத் திடீரென பெரும் பிரச்சினை ஏற்பட, அதற்கு தீர்வு காணும் பொருட்டு நகர்ப் பகுதிக்குள் வருகிறார் சேதுபதி. அப்போது அவருக்கு நேரும் அனுபவங்களே இப்படத்தின் கதையாம். “பழங்குடியின மக்கள் பின்பற்றும் தனித்துவ சடங்குகளைப் பற்றியே கதை நகர்வதால் விஜய் சேதுபதி பல வேடங்களில் பல தோற்றங்களில் நடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக இரண்டாம் பாதியில் 20 வயது இளைஞராகக் காட்சியளிப்பார். இதற்காக மீசை, தாடியை எடுத்துவிட்டார்.

“விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற் றங்களுக்காக மூன்று ஒப்பனை, சிகையலங்கார குழுக்களை நியமித்துள்ளோம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாகிவிட்டன. இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும்,” என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். வழக்கமாக பத்து நிமிடங்கள் திரையில் தோன்றினாலே தன் நடிப்பால் அசத்தி விடுவார் விஜய் சேதுபதி. இந்நிலையில் ஒரே படத்தில் அவருக்கு எட்டு விதமான தோற்றங்கள் என்பதால் இப்படம் குறித்து விநியோகஸ்தர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்புதிய படம் விரைவில் திரை கண்டு வெற்றி பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon