கற்றலுக்குக் காலம் இல்லை - சாயிஷா

‘வனமகன்’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கால்பதித்துள்ளார் இளம் நாயகி சாயிஷா. இவரது குடும்பத்தில் பலர் திரை யுலகத்துடன் தொடர்புகொண்டவர்கள். ஆனாலும் இவர் திரையுலகில் நுழைய யாரும் ஊக்குவிக்கவில்லையாம். தனது சொந்த முயற்சியில் நடிகை யானதாகச் சொல்கிறார். ‘வனமகன்’ படம் தனக்கு அற்புதமான அனுபவங் களைத் தந்திருப்பதாகச் சொல்லும் சாயிஷாவுக்குத் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே விருப்பமாம். “சிறு வயது முதலே மிக எளிமையாக, ஆரவாரம் இல்லாமல் வளர்க்கப்பட்ட வள் நான். என் குடும்பத்தார் திரை யுலகில் நிறைய சாதித்தவர்கள். அந்த வகை யில் நான் ஆசீர்வதிக் கப்பட்டவ ளாக உணர் கிறேன்,” என்று சொல்லும் சாயிஷாவுக்கு நடனம் என்றால் கொள்ளைப் பிரியமாம்.

சிறு வயது முதலே பல்வேறு வகையான நடனங்களை கற்றுத் தேறி இருப்பவர், தன் நடனத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளுக்காக காத்திருப்பதாகச் சொல்கிறார். “கற்றலுக்குக் காலம் கிடையாது. ஆதலால் இன்றளவும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். நடனமாடு வது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. “‘டேம் டேம்’ பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். அவர் தற்போது ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தை இயக்கு கிறார். அதில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன். “‘வனமகன்’ படத்தில் பிரபுதேவா நடன இயக்கத்தில் நான் ஆடியதைப் பெருமையாகக் கருதுகிறேன். அவர் என் திறமை மீது நம்பிக்கை கொண்டு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் என்பதே எனக்குக் கிடைத்த கவுரவம்”. நடிகர்கள் விஷால், கார்த்தியுடன் பணி யாற்ற வாய்ப்புக் கிடைத்ததை தனது அதிர்ஷ்டமாகக் கருதும் சாயிஷா, தமிழ் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றால் அதுவே தமக்குப் போதும் என்கிறார்.