‘கயல்’ சந்திரன், ஆனந்தி இணைந்து நடிக்கும் - ‘ரூபாய்’

பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் நாயகன், நாயகியாக அறிமுகமானவர்கள் சந்திரன், ஆனந்தி. இருவரும் தற்போது மீண்டும் ஜோடியாக நடிக்கும் படம் ‘ரூபாய்’. இவர்களுடன் கிஷோர் ரவிசந்திரன், சின்னி ஜெயந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். “தேனியில் இருந்து சென்னை வரும் நாயகன் அங்கு நாயகியைச் சந்திக்கிறான். இவர்கள் எதிர்பாராத வகையில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். இதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே கதை. வழக்கமான காதல், நகைச்சுவை காட்சிகள் இருக்கும். இப்படம் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்,” என்கிறார் இயக்குநர் எம்.அன்பழகன்.