வசூலில் அசத்துகிறது ‘மரகத நாணயம்’

இப்போதெல்லாம் ஒரு படம் கோடிக்கணக்கில் வசூல் செய் தால்தான் அது வெற்றி பெற்ற தாக அர்த்தமில்லை. மாறாக தயாரிப்பாளர் நஷ்டமடையாமல் சில லட்சங்களை சேர்த்தாலே அது பெரிய விஷயமாகக் கருதப் படுகிறது. இந்த இலக்கணத்தையும் மீறி ஒரு படம் சில கோடிகளை அள்ளும்போது, கொண்டாட்டத் துக்கு அளவே இல்லைதான். அந்த வகையில் ‘மரகத நாணயம்’ படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு உற்சாகத்தில் மிதக் கிறார். ஓர் அறிமுக இயக்குநர் சொன்ன கதையை நம்பி, பணத்தை முதலீடு செய்தவர் இவ்வளவு பெரிய வெற்றியை கற் பனை கூட செய்திருக்கமாட்டார். அந்த அளவுக்கு இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் பெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வார வசூல் ஆறு கோடியைக் கடக்கும் என்கிறார் கள். மொத்தம் 300 திரையரங்கு களில் வெளியான இப்படம் மேலும் நூறு அரங்குகளை ஆக்கிரமிக்க உள்ளது.

‘மரகத நாணயம்’ படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி.