விமர்சனங்களை வரவேற்கும் சிம்பு

சிம்பு என்றாலே சர்ச்சை என்ற நிலை மாறிவிட்டது. இப்போதெல்லாம் அவர் அடக்கியே வாசிக்கிறார். எனினும் அவ்வப்போது தன்னைச் சீண்டுபவர்களுக்கு அவர் பதிலடி கொடுக்கவும் தயங்குவதில்லை. தன்னை வெறுப்பவர்களால் தான், சீண்டுபவர்களால் தான் தனது மதிப்பு உயர்கிறது என்று கூறுகிறார் சிம்பு. இ ப் போ தெ ல் லா ம் தன்னை விமர்சிப்பவர் களிடம் இருந்து அதி கம் எதிர்பார்ப்பதாக கூறும் அவர், பிறரது வளர்ச்சியை முன் வைத்து தனது வளர்ச்சியைத் திட்ட மிடுவதில்லை என்கி றார். “என்னை விமர் சிப்பவர்கள் அந்த வேலையை கைவிட்டால் என் மதிப்பு இறங்கிவிடும்.

முன்பெல்லாம் என்னைப் பற்றி விமர்சிக்க அதிகம் யோசிப்பார்கள். ஆனால் இப் போதோ அத்தகைய விமர்ச னங்கள் குறைந்து சுமாராகி விட்டன. “ஒருவேளை சம்பந்தப்பட்ட வர்களின் படைப்பாற்றல் குறைந்துவிட் டதோ என எண்ணத் தோன்றுகிறது. என்னை விமர்சிக்க வேண்டுமானால் சில நாட்கள் நன்றாக யோசித்து செயல் படுங்கள். மாறாக உருப்படி இல்லாத விமர்சனங்களை முன்வைக்க வேண் டாம்,” என்கிறார் சிம்பு. இப்போதெல்லாம் தன்னை விமர் சிப்பவர்களுக்கு தனது ரசிகர்களே பதிலடி கொடுத்துவிடுவதாக குறிப்பிடு பவர், இதன் காரணமாக தனக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது என்றும் கூறுகிறார்.