விஜய். அட்லி பற்றி வடிவேலு

மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் நகைச்சுவை வேடத்தில் நடிக்கத் துவங்கியது முதல் வடிவேலு பக்கம்தான் காற்று வீசுகிறது. தற்போது ‘விஜய் 61’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பின் போது விஜய்யும் அட்லீயும் தன்னை இடைவிடாமல் பாராட்டுவதையும் புகழ்வதையும் பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோகிறார் வடிவேலு. “நான் நடித்த பழைய படங்களில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளை அட்லீ அப்படியே ஒப்புவிப்பார். விஜய் தம்பி என்னைப் போலவே பேசி நடித்தும் காட்டுவார். “இருவரும் என் மீது அந்தளவு பாசமும் மரியாதையும் வைத்துள்ளனர்.

“நகைச்சுவைக் காட்சிகளைப் பட மாக்கும் போது நான் வசனம் பேசி யதும், விழுந்து விழுந்து சிரிக் கிறார் விஜய். “என்ன தம்பி, இப்படி சிரித்துக் கொண்டே இருந்தால் எப்படி? என்று நான் கேட்பேன். “ அதற்கு ‘என்ன அண்ணே செய்வது? உங்களைப் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடுகிறது’ என்பார் விஜய். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் தினமும் வீட்டில் நான் நடித்த பழைய படங்களில் நகைச்சுவைக் காட்சிகளைத்தான் பார்த்து ரசித்து பொழுதுபோக்குவாராம். அதைக்கேட்ட போது பெருமையாக இருந்தது. “அட்லீ தம்பியும் லேசுப்பட்டவர் அல்ல. ஒவ்வொரு நிமிடத்தையும் திட்டமிட்டு நகர்த்துகிறார்.

ஒவ்வொரு காட்சிக்கும் பெரிய அளவில் மெனக்கெடுகிறார். “விஜய், அட்லீ இருவருமே நான் தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். நான் விட்டுச்சென்ற இடம் இன்னமும் நிரப்பப்படாமல் உள்ளது என்றும் அதை நான்தான் நிரப்பவேண்டும் என்றும் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார் விஜய். “இப்படிப்பட்ட சிலருடன் தொடர்பு வைத்திருப்பது பெரிய ஊக்கமாக உள்ளது. இந்தப் படத்துக்காக ஒன்றரை மாதம் கால்‌ஷீட் கொடுத்திருந்தேன். ஒரு மாதம் முடிந்துவிட்டது. இன்னும் 15 நாள் தான் மீதம் உள்ளது என்பதை நினைத்தால் எனக்கே கவலையாகவும் ஏக்கமாகவும் உள்ளது. இந்தப் படக் குழுவுடன் மீண்டும் இணைய வேண்டும் என விரும்புகிறேன்,” என்று உற்சாகத்துடன் பேசுகிறார் வைகைப்புயல்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழ், தெலுங்குப் படங்களுடன் இந்தி மொழி யிலும் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ், அமித் ஷர்மா இயக்கும் ‘மைதான்’ என்ற படத்தில் அஜய் தேவ்கான் ஜோடியாக நடிக்கிறார். படம்: ஊடகம்

07 Dec 2019

‘நேசித்தால் பலன் கிட்டும்’

ரஜினியும் கமலும் சேர்ந்து அரசியலில் ஈடுபடப்போவதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்கள் படத்தில் இணைந்து நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை கமல் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கப் போகிறாராம்.  படம்: ஊடகம்

07 Dec 2019

மீண்டும் திரையில் இணையும் நடிகர்கள்

காதலன் தன்மீது திராவகம் வீசுவேன் என்று மிரட்டுவதாக ‘பேரன்பு’ பட நடிகை அஞ்சலி அமீர் புகார் அளித்துள்ளார். 

07 Dec 2019

காதலன் திராவகம் வீசுவேன் என்று மிரட்டுவதாக கதறியழுத அஞ்சலி அமீர்