விளம்பரத்துக்காக நடித்த பிரபலங்கள்

புதுப்படம் ஒன்றின் விளம்பரத் துக்காக உருவாக்கப்பட்ட பாடல் காட்சியில் நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஆர்யா ஆகிய நால்வரும் நடித் துள்ளனர். படத்தின் பெயர் ‘கூட்டத்தில் ஒருத்தன்’. ஞானவேல் இயக்கியுள்ள இப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத் தில் ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற பாடலை விளம்பரத்துக்காக உருவாக்கி உள்ளனர். “இப்பாடலை உருவாக்கிய நேரத்தில்தான் தமிழகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.

மாற்றங்கள் ஒன்றே மாறாதவை என்ற இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தமிழ் திரை நட்சத்திரங்கள் முதல் சாதாரண மனிதர் கள் வரை அனைவரையும் சந் தித்தோம். “அவர்களுக்கு மாற்றத்தைப் பற்றி சொல்லக்கூடிய அழகான பரிசு ஒன்றை வழங்கினோம். அந்த அனுபவத்தைப் பதிவு செய்து வெளியிடுகிறோம்,” என் கிறார் இயக்குநர் ஞானவேல். இப்பாடலில் நடிகர்கள் சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், நாசர், பிரகாஷ் ராஜ், சிவகுமார், விஷ்ணு விஷால், சமுத்திரகனி, ஆர்.ஜே.பாலாஜி, அசோக் செல் வன், பிரியா ஆனந்த், நிவாஸ் கே பிரசன்னா, ரம்யா நம்பீசன், கல்லூரி மாணவர்கள் எனப் பலரும் இடம்பெற்றுள்ளனராம். இளையர்களை மட்டுமல்லாது அனைத்துத் தரப்பினரையும் கவ ரும் வகையில் பாடலைக் காட்சிப் படுத்தி உள்ளதாகப் படக்குழு வினர் தெரிவித்துள்ளனர்.

‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தில் அசோக் செல்வன், பிரியா ஆனந்த்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon