‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’

அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணை சேர்ந்துள்ள ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜ னும்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற் றது. இதில் பங்கேற்ற இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, இப்படத் தின் தலைப்பு தமிழில் அமைந்துள்ளது என்றும், கதைக்குப் பொருத்தமாக உள்ளது என்றும் பாராட்டினார். “படத் தலைப்பை ஆங்கிலத்தில் சுருக்கமாகக் குறிப்பிடு வதைத் தவிர்க்க வேண்டும்,” என்றும் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தினார்.