சுடச் சுடச் செய்திகள்

இறுதிக்கட்டத்தில் ‘விக்ரம் வேதா’

‘ஓரம் போ’, ‘வா’ படங்களை இயக்கியவர்கள் இரட்டை இயக்குநர்கள் புஷ்கர், காயத்ரி. இவர்கள் தற்போது ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கி உள்ளனர். இதில் மாதவன் காவல்துறை அதிகாரியாகவும் விஜய் சேதுபதி தாதாவாகவும் நடிப்பது தெரிந்த சங்கதி தான். கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை அண்மையில் ஷாருக்கானும் சிவகார்த்திகேயனும் வெளியிட்டனர். முக்கிய காட்சிகள் பலவும் சென்னை, அதன் சுற்றுப்பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்கிறார் மாதவன்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon