கண்ணன்: கௌதமை முழுமையாக நம்பினேன்

‘ரங்கூன்’ படத்தையடுத்து கௌதம் கார்த்திக் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ளது ‘இவன் தந்திரன்’. இதில் ஷ்ரத்தா அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். கண்ணன் இயக்கி உள்ளார். ‘ரங்கூன்’ கலவையான விமர் சனங்களைப் பெற்றபோதிலும் வசூல் ரீதியில் தயாரிப்பாளர் கையைச் சுட்டுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

கௌதமை ஒப்பந்தம் செய்ய இயக்குநர் கண்ணன் ரொம்ப யோசித்தாராம். தந்தை கார்த் திக்கைப் போலவே கௌதமும் படப்பிடிப்புக்குத் தாமதமாக வரு வார், ஒத்துழைப்பு தரமாட்டார்,” என்றெல்லாம் சிலர் இவரது காதில் ஓதியுள்ளனர். ஆனால் கண்ணன் தன்னிடம் இருந்த தயக்கத்தை உதறித் தள்ளிவிட்டு கௌதமை ஒப்பந்தம் செய்துள்ளார். “நான் கேள்விப்பட்ட பல விஷயங்கள் பொய் என்பது பிறகுதான் தெரிந்தது. நான் கேள்விப்பட்டதுக்கு நேர்மாறாக இருந்தார் கௌதம்.

எப்போது படப்பிடிப்பு என்றாலும் குறித்த நேரத்துக்கு வருவார். நான் சொன்னதை அப்படியே வெளிப் படுத்தினார். அவரை முழுமையாக நம்பியது வீண் போகவில்லை,” என்கிறார் கண்ணன். இப்படத்தில் மொத்தமே இரண்டு பாடல்கள்தானாம். எனவே, கௌதம், ஷ்ரத்தாவுக்குக் காதல் பாடல் இல்லை. இதில் இருவருக்குமே வருத்தம் இல்லையாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் க‌ஷ்மீரா. படம்: ஊடகம்

13 Nov 2019

கஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்

13 Nov 2019

கண்ணியம் தேவை: நிவேதா கோபம்