சுடச் சுடச் செய்திகள்

எனது ஓட்டம் தொடரும் - தனு‌ஷ்

தமிழ், அடுத்து இந்தி, அதற்கடுத்து ஹாலிவுட் படம் என ஒவ்வொரு உயரமாகத் தொட்டுக் கொண்டிருக்கிறார் தனுஷ். தற்போது பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் அவரது நடிப்பில் உருவாகும் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜெர்னி ஆஃப் தி ஃபக்கீர்’ என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில் பல விஷயங்களை மனம்விட்டுப் பேசியுள்ளார். ‘கொடி’ படத்தின் வசூல் சொல்லிக்கொள் ளும்படியாக இல்லை என்கிறார்கள் சிலர். தனு‌ஷும் அதை அறிந்து வைத்துள்ளார். எனவே ‘வேலையில்லா பட்டதாரி 2’ பெரிய வெற்றியைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதையும் ஒப்புக்கொள்கிறார்.

மீண்டும் இரட்டை வேடங்களில் நடிப்பது குறித்து தற்போது யோசிக்கவில்லை என்று சொல்பவர், நல்ல கதை, சூழல் அமையும்போது நிச்சயம் மீண்டும் அதுகுறித்து யோசிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார். “‘கொடி’ படம்கூட சற்று சவாலாகத்தான் இருந்தது. பொதுவாக இரட்டை வேடம் என்றாலே குரல், உடல்மொழியில் வித்தியாசம் காட்டுவோம். அப்படி எதையும் மாற்றாமலே இரு கதாபாத்திரங்களையும் செய்து பார்க்கலாமே என்று முயற்சி செய்த படம் ‘கொடி’. அடுத்தடுத்து இரட்டை வேட கதைகள் தேர்வு செய்யும்போது அதிலும் இதுபோல வித்தி யாசமான முயற்சிகளை எதிர்பார்க்கலாம். தனுஷ் தமிழில் அடுத்து பெரிதும் எதிர் பார்த்திருப்பது ‘வட சென்னை’ படத்தைத் தான். தனது திரை வாழ்க்கையில் இது முக்கியமான படம் என்று அவரே அழுத்தம் கொடுத்துச் சொல்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon