சுடச் சுடச் செய்திகள்

நீச்சல் உடையில் அசத்திய ராதிகா

ராதிகா ஆப்தே குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதும், பரபரப்பான தகவல்கள் வெளியாவதும் வாடிக்கையாகிவிட்டது. தற்போது அவர் இத்தாலியில் நீச்சல் உடையில் வலம்வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விளம்பர நோக்கத்துடன் அவர் இப்படங்களை வெளியிட்டுள்ளதாகச் சிலர் விமர்சித்துள்ளனர். இப்படிப்பட்ட படங்களை வெளியிடக்கூடாது என்றும் சிலர் கூறியுள்ளனர்.

ஆனால் ராதிகா ஆப்தே, இது குறித்தெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அண்மையில் இத்தாலி சென்று தனது விடுமுறையை ஜாலியாக கழித்துள்ளார். அங்குள்ள டஸ்கனி நகர் கடற்கரையில் நீச்சல் உடையுடன் ஜாலியாக வலம் வந்துள்ளார். அங்கு நீலநிற நீச்சல் உடையில் விதம் விதமாக போஸ் கொடுக்கும் படங்கள், கடலில் நீந்தும் கவர்ச்சிப் படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் அம்மணி. இந்த நீச்சல் உடை காட்சிகள் தவிர, கடற்கரை ஓரம் அமர்ந்து அலைகளை ரசிப்பது, இத்தாலியின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்சிகள், நகரில் நடந்து சென்றது ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon