26வது இடத்தில் தனு‌ஷ்

2016ஆம் ஆண்டில் மிகவும் விரும்பப்படும் ஆண் பிரபலங்களின் பட்டியலை ‘டைம்ஸ்’ வெளிட்டுள்ளது. முதல் 50 இடங்களைப் பிடித்துள்ளவர்களின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர்களில் தனுஷ் மட்டுமே 26வது இடத்தைப் பிடித்துள்ளார். மற்ற தமிழ் நடிகர்களின் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. அதே சமயம், தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு 7வது இடத்தையும் பிரபாஸ் 22வது, ராணா 24வது இடங்களையும் பெற்றிருக்கிறார்கள். 50க்குப் பிறகு உள்ள பட்டியலில் அஜித், கௌதம் கார்த்திக், மாதவன், சித்தார்த், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் இடம் பிடித்துள்ளனர். 50 பேருக்குப் பிந்தைய பட்டியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இல்லாதது அதைவிட ஆச்சரியமான விஷயமாகப் பேசப்பட்டு வருகிறது.