பசுமையை நேசிக்கும் ஸ்ரீ திவ்யா

ஸ்ரீதிவ்யாவிற்குப் பசுமை என்றால் அவ்வளவு பாசம். செடி, கொடிகள் மீது மிகுந்த நேசம் உள்ளவராம். அதன் காரணமாகவே ஹைதராபாத்தில் உள்ள தன் வீட்டில் ஏராளமான அழகுச் செடிகளை வளர்த்து, பராமரித்தும் வருகிறார். அதிலும் தனது அறையை ஒட்டியுள்ள பால்கனி பகுதி முழுவதையும் பூந்தொட்டிகளால் நிரப்பியுள்ள அவர், தானே அவற்றுக்கு நீர் பாய்ச்சி, அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறார்.

இந்தச் செடி, கொடிகளைப் பராமரிப்பதுதான் ஸ்ரீதிவ்யாவின் முக்கியமான பொழுதுபோக்கு. மகளின் இந்த பசுமை மீதான பாசத்தைக் கண்டு பரவசப்படும் ஸ்ரீதிவ்யாவின் பெற்றோர், எங்கேனும் வெளியே செல்லும்போது அழகான, வித்தியாசமான பூச்செடிகளைக் கண்டால், உடனே அவற்றை வாங்கிவிடுகிறார்கள். ஸ்ரீதிவ்யாவுக்கு அவற்றைப் பரிசளித்து மகிழ்வதில் பெற்றோருக்கு மிகுந்த பூரிப்பு கிடைக்கிறது.