கடலுக்கடியில் படம் எடுக்கும் டாப்சி

டாப்சி கொஞ்சம் வித்தியாசமானவர். அறிமுகமான புதிதில் சம்பளத்தில் மட்டுமே குறியாக இருக்கிறார் என இவரைப் பற்றி குறை கூறப்பட்டது. இவர் நடித்த சில படங்கள் தோல்வி காணவே, கோடம்பாக்கத்து தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் டாப்சியை மறந்தே போனார்கள். பிறகு தெலுங்குப் படங்களில் நடித்தவர், அங்கு கிடைத்த வரவேற்பைப் பயன்படுத்தி, மொழி மாற்றுப் படங்கள் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களுக்குத் தரிசனம் தந்தார். இப்போது தமிழில் சொல்லிக் கொள்ளும்படியாக இரு புதிய பட வாய்ப்புகள் கிடைத்துள்ளனவாம். அவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

டாப்சியைப் பொறுத்தவரையில் பறவைகளைப் போல் எங்காவது பறந்துகொண்டே இருக்க வேண்டுமென ஆசையாம். பயணம் என்றால் அவ்வளவு விருப்பம் என்கிறார். உடன்பிறந்த சகோதரி ஷாகனோடு இணைந்து ‘வெட்டிங் ஃபேக்டரி’ எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். நீருக்குள்ளே படமெடுக்கும் நவீன ரக கேமரா ஒன்றை வாங்கியிருக்கிறாராம். எனவே, கடலுக்கு அடியில் விதவிதமான படங்கள் எடுப்பதுதான் டாப்சியின் அண்மைய பொழுதுபோக்காக உள்ளது. ‘காஸி’ படத்தில் நடித்ததில் இருந்து இந்த புதுப்பழக்கம் ஏற்பட்டுள்ளதாம்.

Loading...
Load next