‘பண்டிகை’

கிருஷ்ணா, ஆனந்தி இணைந்து நடித்துள்ள ‘பண்டிகை’ படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார். படத்தின் கதை, அது சொல்லப்பட்ட விதம் ஆகியவற்றால் கவரப்பட்ட ஆரா சினிமாஸ் நிறுவனம், உலகம் முழுவதும் இதை வெளியிட முன்வந்திருக்கிறது. பரிசு அதோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. அந்நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்குவதற்கு பெரோசை ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் திரைகாண உள்ளது ‘பண்டிகை’.