மாற்று வழி: நடிகர் விஷால் தீவிர ஆலோசனை

தமிழக அரசு திரையரங்கு களுக்கு விதித்துள்ள கேளிக்கை வரிக்கும் ஜிஎஸ்டி வரிக்கும் திரையுலகில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து தமிழகத் திரையரங்க உரிமை யாளர் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த தால், தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரை யரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பாளர்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனக் கவலை தெரிவித்துள்ளார் விஷால்.

தயா ரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்ற வகையில், அவர் பிரச்சி னையைத் தீர்ப்பதற்குப் பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, திரைப்படங்கள் ‘டிடிஎச்’ முறையில் தொலைக் காட்சியில் ஒளிபரப்புவது குறித்து அவர் ஆலோசனை செய்து வருகிறாராம். “தமிழக முதல்வரையும் அமைச்சர்களையும் சந்தித்து திரையரங்க நுழைவுச்சீட்டுக்குத் தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம். கேளிக்கை வரியை அரசு ரத்து செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். “திரையரங்குகளை மூடிவிட்ட தால், புதிய படங்களை டிடிஎச் மூலம் ஒளிபரப்புவது பற்றி எந்த வொரு முடிவும் எடுக்கவில்லை. இதுபோன்ற வரி விதிப்பு சுமை கள் நீடித்தால் தயாரிப்பாளர் களின் நலன் கருதி அடுத்த கட் டமாக அனைத்து வழிகளையும் நாங்கள் ஆராய்ந்து முடிவு எடுப்போம்,” என்கிறார் விஷால்.

செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் நடிகர் விஷால்