‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

அதர்வா, ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணீதா ஆகியோர் நடிக்கும் படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. அண்மையில் வெளியான இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளும் பாடல்களும் ரசிகர்கள் இடையே வரவேற்புப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தைத் தணிக்கைக் குழுவினருக்குத் திரையிட்டுக் காண்பித்திருக்கிறது படக் குழு. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், ‘யு’ சான்றிதழ் வழங்கியதுடன், படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டியுள்ளனராம். இதையடுத்து இப்படம் வரும் 14ஆம் தேதியன்று வெளியீடு காணும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “சூரி தோன்றும் நகைச்சுவைக் காட்சிகள் கலகலப்பாக இருக்கும். மேலும் இமான் இசையில் உருவாகி வெளியாகி இருக்கும் பாடல்கள் ரசிகர்களின் மனதில் நிற்கும்,” என்கிறார் இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் இளவரசு.