‘மாணிக்’: சாதிக்கத் துடிப்போரின் கதை

‘மாணிக்’: சாதிக்கத் துடிப்போரின் கதை ஏதாவது சாதனை புரிய வேண் டும் என்று நினைத்து களத்தில் குதிக்கும் இளைஞனின் கதை தான் ‘மாணிக்’ என்கிறார் அப் படத்தின் இயக்குநர் மார்டின். இதில் கதாநாயகன் மா.கா.பா. ஆனந்த். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் சூஷா குமார். “இது ஒரு நகைச்சுவை படம் மட்டுமல்ல; இளையர்கள் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் படம். “ரசிகர்கள் மனதில் நன் றாகப் பதிய வேண்டும் என்பதற் காக நகைச்சுவை கலந்து ஜன ரஞ்சகமாக இப்படத்தை உரு வாக்கி உள்ளோம். “கதைப்படி, நாயகன் சிறு வயதில் இருந்தே ஒரு ஆசிரமத் தில் வளர்கிறான். இளைஞனாக உருவெடுத்த பின்னர், தனது நெருக்கமான நண்பனுடன் இணைந்து பெரிதாக ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற எண் ணத்தில் ஆசிரமத்தை விட்டு வெளியேறுகிறான். “அந்த இளைஞனும் அவனது நண்பனும் தங்கள் கனவுக்கு இடையூறாக என்னென்ன தடை களைச் சந்திக்கிறார்கள்? நினைத்ததைச் சாதித்தார்களா? என்பதே இறுதிக்கட்டம். “நாயகனின் நண்பராக நடிப்ப வர் வத்சன் வீரமணி. நாயகி சூஷா குமார் நடிப்பில் அசத்து கிறார். படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. அக்டோபர் மாதத் தொடக்கத்தில் படம் திரைக்கு வரும்,” என்கிறார் இயக்குநர் மார்டின்.

‘மாணிக்’ படத்தில் மா.கா.பா. ஆனந்த், சூஷா குமார்.