‘உறுதிகொள்’

பள்ளிப் பருவம் என்பது நல்ல கல்வியறிவைப் பெறுவதற்குத்தான் என்ற நல்ல கருத்தைச் சொல்ல வரும் புதிய படம் ‘உறுதிகொள்’. இந்தப் பருவத்தில் காதல் என்பது தேவையற்றது, தவறானது என் பதையும் இப்படம் விவரிக்குமாம். ஏபிகே பிலிம்ஸ், சிநேகம் பிலிம்ஸ் ஆகிய இரு பட நிறுவ னங்களும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ‘கோலி சோடா’வில் ரசிகர்களின் மனம் கவர்ந்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். மேலும் காளி வெங்கட், தென்ன வன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங் களை ஏற்றுள்ளனர்.

கதை, திரைக்கதை எழுதி, இயக்கி இருப்பவர் அய்யனார். இவர் இயக்குநர் கிருஷ்ணாவிடம் ‘நெடுஞ்சாலை’ படத்தில் உதவியா ளராகப் பணியாற்றியவர். “பள்ளியில் படிக்கிற மாணவர் கள், மாணவிகளிடையே உருவாகும் காதல் தவறானது. சரியான புரிதல், பக்குவம் இல்லாத வயதில் ஏற்படும் அந்தக் காதலானது, பருவ மாற்றம் ஏற்படுகிற காலக் கட்டத்தில் உருவாகும் இனக் கவர்ச்சி மட்டுமே. அது உண்மையான காதல் இல்லை. “காதலன் கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் பெண்கள் போகக் கூடாது. அப்படிச் சென் றால் என்ன மாதிரியான விளை வுகளைச் சந்திக்க நேரிடும் என்பதுதான் இப்படத்தின் கதை. “படம் பார்க்கின்ற ஒவ்வொரு பெற்றோரும் பெண் பிள்ளைகளை எப்படி எல்லாம் கண்காணிக்க வேண்டும் என்கிற படிப்பினையைக் கற்றுக்கொள்வார்கள்,” என்கிறார் அய்யனார்.