சம்பளம் உயர்ந்தும் குவியும் வாய்ப்புகள்

தற்போது அரவிந்த்சாமி காட்டில் அடைமழை பெய்து கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த வெற்றிப் படங்களால் கோடம்பாக்க சந்தையில் இவரது மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். ஒரு கோடி பெற்றவர் மும்மடங்காக சம்பளத்தை உயர்த்திய போதிலும் வாய்ப்புகள் என்னவோ வரிசையாக வந்துகொண்டுதான் இருக்கின்றன. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பல இயக்குநர்கள் எதிர்மறை வேடங்களுக்கு அரவிந்த்சாமியே தங்களது தேர்வு என்று சொல்வதால் தயாரிப்பாளர்களும் வேறு வழியின்றி அவர் கேட்ட சம்பளத்தை தர முன்வருகிறார்கள். அதற்காக அதிக சம்பளம் கொடுப்பவர்களின் படங்களில் நடிக்க அரவிந்த்சாமி உடனே ஒப்புக்கொள்வதில்லை. கதையைக் கேட்டு, தனக்கான கதாபாத்திரத்தின் தன்மையை ஆய்வு செய்து அதன்பிறகே கால்‌ஷீட் ஒதுக்குகிறார். எதிர்மறை வேடங்கள் தவிர, கதாநாயகனாக நடிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறாராம் அரவிந்த்சாமி.

Loading...
Load next