‘ஓவியா’: குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய பேய்ப் படம்

பெற்றோர் இடையே இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பாதிக்கப்படும் ஒரு குழந்தையின் கதையைச் சொல்ல வரும் புதிய படம் 'ஓவியா'. புதுமுக இயக்குநர் கஜன் சண்முக நாதன் என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார். படத்தின் கதாநாயகன் காண்டீபன். இவர்தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட. இலங்கையைச் சேர்ந்த மிதுனா என்பவர் இப்படத்தின் நாயகியாக அறிமுகமாகிறார். படத்தின் தலைப் பான 'ஓவியா' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் சுவிக்சா ஜெயரத்னம் நடிக்கிறார். "பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டு வருகின் றன. மலையும் மலைசார்ந்த இடமும் தான் இப்படத்தின் கதைக்களம். "இது வேகமாக இயங்கிக் கொண்டி ருக்கும் உலகம். இன்றைய இயந்திர மயமான, வேகமான வாழ்க்கை சூழலில் பெரும்பாலான கணவன், மனைவி இடையே சரியான புரிதல் என்பது இல்லை. இதுவே கருத்து வேறுபாடுகளுக்கு வித்திடுகிறது. "இதைத் தவிர்க்கவேண்டும் எனில் நல்ல புரிதல் தேவை.

பெற்றோர் இடையே நிலவும் மோதல்கள் காரண மாகப் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். குறைந்தபட்சம் பெற்ற பிள்ளை களின் எதிர்காலம் கருதி பெற்றோர் சுமுகமாக வாழ பழகிக்கொள்ள வேண்டும்," என்கிறார் இயக்குநர் கஜன். பெற்றோரின் அன்பு கிடைக்காமல் அவர்களின் வீண் சச்சரவுகளால் பாதிக்கப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகி கவனிப்பின்மையால் உயிரி ழக்கிறது ஒரு குழந்தை. அதுவே பின்னர் பேயாக மாறுகிறது. கோபத்தில் தன் பெற்றோருக்கு அக்குழந்தை பேய் வடிவில் பாடம் புகட்டுகிறதா? அதன்மூலம் பெற்றோர் மனம் திருந்துகின்றனரா? என்பதே இப்படத்தின் முடிவு. தற்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகி றது. "வழக்கமான பேய்க் கதையாக இல்லாமல், இதில் மாறுபட்ட திரைக் கதையுடன் நல்ல அறிவுரைகளையும் கூறுகிறோம். எனவே ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து இப்படத்தைக் கண்டுகளிக்கலாம்," என்று உத்தர வாதம் தருகிறார் இயக்குநர் கஜன். இப்படம் விரைவில் திரைகாண இருக்கும் நிலையில், விநியோகஸ்தர் கள் மத்தியில் எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக படக்குழுவினர் மகிழ்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!