‌ஷிவதா: நிறைய கற்றுக்கொண்டேன்

‘நெடுஞ்சாலை’, ‘அதே கண்கள்’ படத்தில் நடித்த ‌ஷிவதா நாயரை ஒருவேளை ரசிகர்கள் மறந்திருக்கக்கூடும். அவர் தற்போது ‘கட்டம்’ என்ற புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘முரண்’ படத்தை இயக்கிய ராஜன்மாதவ் இப்படத்தை இயக்குகிறார். ‘ஐ கிரியேட் ஒண்டர் பிலிம்ஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில் சத்யா ஜனா தயாரிக்கிறார். புதுமுகங்கள் நந்தன், நிவாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

“இப்படத்தில் எனது கதாபாத்திரம் சவாலானது. இதில் நடித்ததன் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இப்படத்தின் திரைக்கதையும் வித்தியாசமானதாகவும் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதியும் வகையிலும் இருக்கும். “புதுமுகங்களும் இதில் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். இது என் திரை வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமையும்,” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ‌ஷிவதா நாயர்.