லட்சுமி இயக்கத்தில் ஐஸ்வர்யா

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். இதைச் சொல்லும் போதே அவர் முகத்தில் அப்படியொரு பூரிப்பு. புதிய படத்துக்கு ‘ஹவுஸ் ஓனர்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். அண்மையில் மும்பை சென்றிருந்தபோது பார்த்த இந்தித் திரைப்படம் லட்சுமி ராமகிருஷ்ணன் மனதை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம். அப்படம் அளித்த உந்துதலால் புதிய கதையை எழுதி அதையே படமாக எடுக்க உள்ளார். “ஓர் இளம் தம்பதியர் தங்கள் கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பதுதான் படத்தின் மைய கருத்து. இதனை நகைச்சுவையோடு சொல்லப்போகிறோம். விரைவில் படப்பிடிப்பு துவங்கும். “லட்சுமி ராமகிருஷ்ணன் திறமையான இயக்குநர். நல்ல கருத்துகளைச் சொல்லக்கூடியவர் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். அவரது இயக்கத்தில் நடிக்கப்போவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இது அனைவரும் ரசிக்கும் படமாக உருவாகும் என உறுதியாகச் சொல்லலாம்,” என்கிறார் ஐஸ்வர்யா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அசோக் செல்வன் நடிக்க உள்ளார். ஜோமன் டி.ஜான் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிகிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon