சுடச் சுடச் செய்திகள்

ரசிகர்களைச் சிரிக்க வைக்க வருகிறது ‘மீசைய முறுக்கு’

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மீசைய முறுக்கு’. நாயகனாக மட்டுமல்லாமல் இயக்குநர் அவதாரமும் எடுத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைப்பதும் இவர்தான். கதாநாயகி விஜயலட்சுமி. ஆதியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன், சில கற்பனைக் காட்சிகளும் கலந்து இப்படம் உருவாகி இருக்கிறது. “இது ஒரு நகைச்சுவைப் படம். கற்பனை கலந்த உண்மைக் கதையாக உருவாகி வருகிறது. அதே சமயம் காட்சிகள் யதார்த்தத்தை மீறாமலும் சுவாரசியமாகவும் இருக்கும். “தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரையில் இதுநாள் வரை எனக்கு அளித்துள்ள ஆதரவை நினைக்கும் போது நெகிழ்வாகவும் பெருமையாகவும் உள்ளது. என்றுமே அவர்களை மகிழ்விக்கும் பணியை முடிந்த வரை சிறப்பாகச் செய்வேன்,” என்கிறார் ஆதி. இப்படம் இன்று வெளியாகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon