‘தீரன் அதிகாரம் ஒன்று’

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைப் பெரிதும் எதிர்பார்த்துள்ளார் கார்த்தி. இதையடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்த உள்ளாராம். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இதில் கார்த்திக்கு மீண்டும் போலிஸ் அதிகாரி வேடம். அவருக்கு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். மேலும், அபிமன்யு சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் உள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. “மொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் துவங்கியுள் ளன. ஜெய்ஸால்மர், பூஜ், சென்னையில் நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது படம் வெளியீடு காணத் தயாராகி வருகிறது. இப்படம் வித்தியாசமான அனுபவங்களைத் தந்தது,” என்கிறார் கார்த்தி.

Loading...
Load next