சுடச் சுடச் செய்திகள்

சண்டை காட்சியில் வாள் குத்தியது; கங்கனாவுக்கு அறுவை சிகிச்சை

நடிகை கங்கனா ரணாவத் சண்டை காட்சியில் நடித்தபோது அவரது நெற்றியில் வாள் குத்தி யதால் படுகாயம் அடைந்தார். இதன் கார ணமாக அவரது நெற்றியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 15 தையல்கள் போடப்பட்டுள்ளன. ‘தாம் தூம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர் கள் மத்தியில் புகழ்பெற்றவர் கங்கனா ரணா வத். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகி யாக இருக்கிறார். ‘குயின்’ படத்தில் நடித்த தற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை யும் பெற்றார். தற்போது ஜான்சிராணி வர லாற்றை மையமாக வைத்து தயாராகும் ‘மணி கர்னிகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக கங்கனா ரணாவத் வாள் சண்டை, குதிரையேற்றம் ஆகிய பயிற்சிகளை எடுத்து வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் அரண்மனை அரங்குகள் அமைத்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வில்லன்களுடன் கங்கனா ரணாவத் வாள் சண்டை போடுவது போன்ற காட்சியைப் பட மாக்கினர். கங்கனா ரணாவத் உண்மையான வாளை கையில் வைத்து சண்டை போட்டார். அப்போது அவரை எதிர்த்து சண்டை போட்டவரின் வாள் எதிர்பாராதவிதமாக கங்கனா ரணாவத்தின் நெற்றியில் குத்தியது. இதனால் கங்கனா மயக்கம் அடைந்து கீழே சாய்ந்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon