முதல் படத்திலேயே ஆதி தனி முத்திரை

‘மீசைய முறுக்கு’ படத்தில் நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமாகிறார் ஆதி. கதாநாயகி விஜயலட்சுமி. இயக்கம், இசை, நடிப்பு என முக்கிய மூன்று துறைகளையும் கையில் எடுத்துள்ளார். இளைஞர்களின் கல்லூரி வாழ்க்கை, பெற்றோர்களின் கனவு, காதலை சுமக்கும் சாதி உள்ளிட்ட பல விஷயங்களையும் ஜாலியாக சொல்லியிருக்கிறார் ஆதி. அத்துடன் பல புதுமுகங்களுக்கும் வாய்ப்புகளையும் அளித்துள்ள ‘மீசைய முறுக்கு’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக முதல் படத்திலேயே இயக்குநராகவும் நடிகராகவும் முத்திரை பதித்துள்ளார் ஆதி என்று சொல்கின்றனர். விஜய் சேதுபதி, விக்ரம் நடித்த ‘விக்ரம் வேதா’, ஆதி நடித்த ‘மீசைய முறுக்கு’ ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon