ஆண்டனி படத்தில் சுனைனா

முதன்முறையாக விஜய் ஆண்ட னியுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சுனைனா. இப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். ‘காளி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு மூன்று ஜோடிகளாம். அவர்களில் ஒருவராக சுனைனாவை முதலில் ஒப்பந்தம் செய்துள்ளனர். “நான் நடிக்க வந்த புதிதில் ‘காதலில் விழுந்தேன்’ படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத் தார். அன்று அவர் இசையில் நடித்தவள், இப்போது அவருட னேயே ஜோடி சேர்ந்திருக்கிறேன் என்பதை நினைத்தால் மகிழ்ச்சி யாக உள்ளது,” என்கிறார் சுனைனா. இப்படத்தை விஜய் ஆண்டனி தனது சொந்த தயாரிப்பு நிறுவ னமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப் மூலம் தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. தற்போது ‘அண்ணாதுரை’ படத் தில் நடித்து வருகிறார் ஆண்டனி.

Loading...
Load next