இலியானா தரும் ஆலோசனைகள்

எதைச் செய்தால் பதற்றம் குறையும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று தெள்ளத் தெளிவாகப் பட்டியலிடுகிறார் இலியானா. அம்மணிக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்பது தெரியவில்லை. ஆனால் காதலர் ஆண்ட்ரூவுடன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு ஜாலியாக விடுமுறையைக் கழித்து வருகிறார். அண்மையில் ஃபிஜி தீவுக்குச் சென்றிருந்தாராம். அங்கு பல்வேறு சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டதன் மூலம் உயரத்தைக் கண்டு பயப்படும் போக்கு மாறிவிட்டதாம். “நம்முடைய பெரும்பாலான நேரத்தை நாம் பார்க்கக்கூடிய பல்வேறு பணிகளே விழுங்கி விடுகின்றன. கால நேரத்தை நமக்காகவும் சில சமயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் விடுமுறைப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். “இத்தகைய பயணங்கள் பதற்றத்தில் இருந்து நம்மை விடுவித்து, மனதில் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்,” என்கிறார் இலியானா.